மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் மசோதா!

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது.  முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது.  முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

முத்தலாக் மசோதாவுக்கு எதிராக 84 பேரும், ஆதரவாக 99 பேரும் வாக்களித்தனர். மேலும் 29 பேர் வெளிநடப்பு செய்தனர். 

முத்தலாக் மசோதாவின் முக்கிய அம்சங்கள்! 

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலே முத்தலாக் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக்கூறி விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றம் என முத்தலாக் மசோதா கூறுகிறது. அதாவது எழுத்து  மூலமாகவோ, அல்லது முன்னணு தகவல்தொடர்பு மூலமாகவோ முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றமாகவே இதில் பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் இஸ்லாமிய பெண்கள் விவாகரத்தே பெறக்கூடாதா என்ற கேள்வி எழலாம்… இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்ய வேண்டும் என்பதையே இந்த மசோதா எடுத்துறைக்கிறது. 

முத்தாக் மூலம் விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கூறுகிறது முத்தலாக். இதன்படி கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். முத்தலாக் வழக்கின்போது கணவன், மனைவி இடையே சமரசம்  ஏற்பட்டு சேர்ந்துவாழ முடிவெடுத்தால் மீண்டும் வாழவும் முத்தலாக் மசோதா வகை செய்கிறது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இந்த மசோதாவின் படி பெண்ணுக்கே கிடைக்கிறது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....