Home இந்தியா மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்தா? - உத்தவ் தாக்கரே விளக்கம்

மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்தா? – உத்தவ் தாக்கரே விளக்கம்

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு மிகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகாராஷ்டிராவில் ரயில், பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல் தவறானது, போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படமாட்டாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு மிகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பீதி காரணமாக அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

train

இது குறித்து உத்தவ் தாக்கரேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தற்போது 50 சதவிகித ஊழியர்களைக் கொண்டே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்து சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை. 
பொது மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

mumbai

அடுத்த 20 நாட்களுக்கு தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும். அரசின் அறிவுரையை ஏற்காமல் மக்கள் தொடர்ந்து தேவையற்ற பயணத்தை மேற்கொண்டால், அதன் மூலம் கொரோனா பாதிப்பு வேகமாக பரவுகிறது என்று தெரியவந்தால் பொது போக்குவரத்தை ரத்து செய்வது பற்றிப் பரிசீலிக்கப்படும்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது...

‘ஆட்டோமேட்டிக் டிராபிக் சிக்னல்’ அசத்தும் தேனி மாவட்ட நிர்வாகம்!

தேனியில் நவீன முறையில் இயங்கக்கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால்,...

மணல் கடத்திவந்த டிராக்டர் பறிமுதல் – ஓட்டுநருக்கு போலீசார் வலை

தர்மபுரி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணல் கடத்திவந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!