Home அரசியல் மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே பாதயாத்திரை நடத்தி இருப்பார்- மோடியை தாக்கிய திக்விஜய சிங்

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே பாதயாத்திரை நடத்தி இருப்பார்- மோடியை தாக்கிய திக்விஜய சிங்

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்திருந்தால்காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கிய அன்றே அதனை கண்டித்து டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு பாதயாத்திரை நடத்தி இருப்பார் என மோடி அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஒரு விழா ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங் பேசுகையில் கூறியதாவது: காஷ்மீர் மரபு, ஜனநாயகம் மற்றும் மனிதநேயம் ஆகிய 3 கொள்கைகள் வாயிலாக காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கோட்பாட்டை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிதைத்து விட்டனர்.

அமித் ஷா, மோடி

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்திருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிருந்து ஸ்ரீநகர் லால் சவுக்குக்கு பாதயாத்திரை மேற்கொள்ள போவதாக அறிவித்து இருப்பார். முஸ்லிம்களின் தீவிரமயமாக்கல் போலவே இந்துக்களின் தீவிரமயமாக்கலும் ஆபத்தானது. பெரும்பான்மையினர் வகுப்புவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டால் நாட்டை அதிலிருந்து காப்பாற்றுவது கடினம். இவ்வாறு அவர் பேசினார்.

மகாத்மா காந்தி

சுமார் 70 ஆண்டுகளாக இருந்த இந்த காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் மத்திய அரசு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews