மகளை வழிமறித்து பேசியவரை தட்டி கேட்ட தந்தை அடித்து கொலை

மகளை வழிமறித்து பேசிக் கொண்டிருந்த இளைஞரை தட்டிக் கேட்ட தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை: மகளை வழிமறித்து பேசிக் கொண்டிருந்த இளைஞரை தட்டிக் கேட்ட தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(52). இவரது மகள் அறந்தாங்கியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வழக்கம்போல வேலைக்கு சென்றபோது, அப்பகுதியில் உள்ள தைலமரக்காடு அருகே அதே ஊரைச் சேர்ந்த செல்வம்(25) என்பவர் வழிமறித்து பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கம் அப்பகுதிக்கு விரைந்து சென்று செல்வத்திடம், எதற்காக தனது மகளை வழிமறித்து பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வம் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். இதில் மகாலிங்கம் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்

Most Popular

காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

தெருவில் மனிதர்களின் மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை பார்த்து பழனி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மந்திரவாதிகள் இப்படி செய்தார்களா அல்லது குடிமன்னர்கள் இந்த எலும்பு  கூட்டை போட்டுச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை...

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக...

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...