Home சினிமா மகளிர் தின வாழ்த்து சொல்லி, வம்பில் சிக்கிய பிக்பாஸ் ஜூலி!?

மகளிர் தின வாழ்த்து சொல்லி, வம்பில் சிக்கிய பிக்பாஸ் ஜூலி!?

நடிகை ஜூலி மகளிர் தின வாழ்த்து கூறிய பதிவிற்கு நெட்டிசன்கள் சரமாரியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை: நடிகை ஜூலி மகளிர் தின வாழ்த்து கூறிய பதிவிற்கு நெட்டிசன்கள் சரமாரியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக அறியப்பட்டவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக் கொண்டு, மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.

julie

பிக் பாஸ் நிகழ்ச்சியிம் முதல் சீசன் முடிந்து, இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது ஆனால், ஜூலியை கலாய்ப்பது மட்டும் ஓயவில்லை.இவர் தற்போது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். 

இவர் எந்த ஒரு பதிவு வெளியிட்டாலும் அதை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் மகளிர் தின வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் ‘பெண்ணாய் பிறந்ததற்காகப் பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்வீட்டை பார்த்த பலரும் ‘யாருப்பா உன்னை பெண் என்று சொன்னது என்றும், உன்ன பொண்ணா நெனச்சதுக்கு நாங்க ரொம்ப வருத்தப்படுகிறோம் என்று சரமாரியாக ஜூலியின் ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!