Home தமிழகம் மகன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது... எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் தந்தை காவல்துறையில் புகார்

மகன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது… எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் தந்தை காவல்துறையில் புகார்

எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர்: எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக மக்களுமே அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது என அவரது தந்தை தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும். இந்த உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
 

Most Popular

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்

மக்களவையில் நேற்று நள்ளிரவையும் தாண்டி உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பூஜ்ய நேரத்தில் 88 உறுப்பினர்களை சபாநாயகர் பேச அனுமதி அளித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை கருத்தில்...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எச்.டி. தேவகவுடா நேற்று பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் பிரதமரும், மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா கடந்த ஜூன் மாதம் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை...

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு...

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை...
Do NOT follow this link or you will be banned from the site!