மகன்கள் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 5 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்!?

மகன்கள் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர்:  மகன்கள் கண்முன்னே மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் ஏ.பி.டி.ரோடு கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பலசுப்பிரமணியின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகன்களும், 12 வயதில் ஒரு மகளும் இருந்ததால் குழந்தைகளை விடுதி ஒன்றில் சேர்த்துள்ளார். இதையடுத்து அவ்வப்போது குழந்தைகளை சென்று விடுதியில் பார்த்து வந்துள்ளார்.

harass

இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கோவிலுக்கு அழைத்து செல்ல போவதாக கூறி மூன்று பிள்ளைகளையும் அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் 2 நாட்களுக்குப் பிறகு பிள்ளைகளை விடுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.  விடுதிக்கு வந்த மகள் மட்டும் அழுது கொண்டே இருந்ததால் விடுதியின் நிர்வாகிகள் சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர். 

auto

அப்போது தனது தந்தை  இரவு சரக்கு ஆட்டோவில் வைத்து மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 2 மகன்கள் முன்னிலையில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

harssment

இதன் காரணமாக பாலசுப்ரமணியத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம், ‘குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு  குழந்தை நல  ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...