Home சினிமா ப்ளூ சட்டை மாரனிடம் சம்பளம் வாங்காமல் பணிபுரிய தயார்: வாய்ப்பு கேட்ட பிரபல முன்னணி இயக்குநர்!

ப்ளூ சட்டை மாரனிடம் சம்பளம் வாங்காமல் பணிபுரிய தயார்: வாய்ப்பு கேட்ட பிரபல முன்னணி இயக்குநர்!

ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்கும் படி பிரபல இயக்குநர் விஜய் மில்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்கும் படி பிரபல இயக்குநர் விஜய் மில்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னொரு காலத்தில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து மற்றவர்களுக்கு கதையை சொல்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. அனால் தற்போது படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்பவர்களின் வீடியோக்களை யூ – ட்யூபில் பார்த்து விட்டு தான் திரைப்படத்திற்கே செல்லும் வழக்கத்தையும் சிலர் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களில் தனி நபர்களாக சேனல் ஆரம்பித்து பிரபலமானவர்கள் ‘ப்ளூசட்டை’ மாறன் மற்றும் பிரசாந்த்.

இதில் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் திரைப்படங்களை விமர்சனம் என்ற பெயரில் நாறு நாறாக கிழித்து வருகிறார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற பல படங்கள் கூட இவரின் கடுமையான விமர்சனத்திலிருந்து தப்பியதில்லை. ஒவ்வொரு படத்தையும் இவர் எப்படி திட்டுகிறார் என்பதைப் பார்ப்பதற்கு என்றே ஒரு தனி டீம் இருக்கிறது. 

vijay milton

இதனால் இயக்குநர்கள் ,தயாரிப்பாளர்கள், சம்மந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் என பலரும் கடுப்பாகி அவருடன் மல்லுக்கட்டியுள்ளனர். இன்னும் சிலரோ “இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஒரு படம் எடுங்க பார்ப்போம்” என்று நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் இவரிடம் சவாலும் விட்டுள்ளனர்.

அந்த சவால்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான், ஒரு புதிய படத்தை இயக்கவிருப்பதாக மாறன் அறிவித்துள்ளார். அதில் நடிக்க விரும்பும் நபர்கள் தன்னை தொடர்பு கொள்ளும் படி ஒரு மின் அஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கோலிசோடா, 10 என்றதுக்குள்ள உள்ளிட்ட சில படங்களை இயக்கியவரும், ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான விஜய் மில்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில் ‘மாறன் sir படம் இயக்கவிருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதிவாளராகவோ, உதவி இயக்குநராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன். கற்றுக்கொள்ளலாம் எனத்தோன்றுவதால் wil work even without any professional fees’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக விஜய் மில்டன் தான்இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படம் வெளியான சமயத்தில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யக்  புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!