Home தேர்தல் களம் ப்ரெண்ட்ஷிப் பார்முலா: தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி

ப்ரெண்ட்ஷிப் பார்முலா: தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குநர் சமுத்திரக்கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ப்ரெண்ட்ஷிப் பார்முலா:  தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி

மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குநர் சமுத்திரக்கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

மக்களவை தேர்தல்

mk

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகள் 
வாக்கு  சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் 

su. venkatesan

 

ஆனால் மதுரையில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாது,  இயக்குநர்கள் கரு.பழனியப்பன், ராஜூமுருகன், லெனின் பாரதி நடிகை ரோகிணி, கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 

 நண்பர் என்ற முறையில் வெங்கடேசனை ஆதரவு 

samuthirakani

 

அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான  சமுத்திரக்கனி சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,   உலகம் முழுவதும் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மதுரையின் புகழான கீழடியை தனது வேள்பாரி படைப்பில் கொண்டு வந்த எழுத்தாளர் சு. வெங்கடேசன். இது போன்ற இளம் எழுத்தாளர் ஒருவருக்கு உங்கள் வாக்கைச்  செலுத்துங்கள். அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக  முதல் தலைமுறை வாக்காளர்களிடம் வேண்டிக் கொள்கிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையில் வெங்கடேசனை ஆதரித்து உங்களிடம் வாக்கு  கேட்டு வந்தாளேன்’ என்றார். 

இதையும் வாசிக்க: நடிகையை திருமணம் செய்து கொள்ளாதே: அஜித்துக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகர்!

ப்ரெண்ட்ஷிப் பார்முலா:  தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘தினமும் கோமியம் குடிக்கிறேன்’ எனக்கு கொரோனா வரலையே…சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளையெல்லாம் நம்பி பல்வேறு செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று சாணத்தை...

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்!

விருதுநகர் சிவகாசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக இன்று ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி...

சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.06 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 848 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா...

ஆக்சிஜன் தட்டுப்பாடு.. நள்ளிரவில் களமிறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர், எம்.பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பரவலாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நேற்று இரவு...
- Advertisment -
TopTamilNews