Home இந்தியா ப்ரியங்கா வடிவத்தில் மம்தா... சேட்டை செய்யும் பாஜகவினர்..!

ப்ரியங்கா வடிவத்தில் மம்தா… சேட்டை செய்யும் பாஜகவினர்..!

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் ப்ரியங்காவின் முகத்தை அகற்றி அதில் மம்தாவின் முகத்தை பொருத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைற்ற மெட் காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலிலும், ஸ்டைலான உடையிலும் வந்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொழிந்தனர். மேலும் சிலர் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளினர். 

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் ப்ரியங்காவின் முகத்தை அகற்றி அதில் மம்தாவின் முகத்தை பொருத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இதுபோன்ற செயல் மிகவும் கண்டிக்கதக்கது எனக்கூறி மேற்கு வங்க காவல்துறையினர் பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஏற்கெனவே பிரதமர் மோடிக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு இடையே வார்த்தைப்போர் முற்றிவரும் நிலையில் இதுபோன்ற புகைப்படம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ...

இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் உட்பட 4 பேர் மீட்பு

திருவள்ளூர் சென்னை அடுத்த குன்றத்தூர் - ஶ்ரீபெரும்புதூர் சாலையில் இரவில் இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை தீயணைப்பு வீரர்கள்...

2 கோடியை நெருங்குகிறது சிகிக்சை எடுப்போர் எண்ணிக்கை

டிசம்பர் 5-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம்...

‘விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது திமுக’ : மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கட்சியினர், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' போராட்டத்தை...
Do NOT follow this link or you will be banned from the site!