Home சினிமா போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார் நடிகை இனியா! 

போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார் நடிகை இனியா! 

நடிகை இனியா தான் நடித்து வரும் காபி படத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை இனியா தான் நடித்து வரும் காபி படத்தை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

நடிகை இனியா ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது.  மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். 

iniya

இவர் தற்போது தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றி அவர் பேசுகையில், ‘ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறாள். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். 

iniya

நான் இதில் சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன்..என் திறமையை நிரூபிக்கக்  கண்டிப்பாக இப்படம் கைகொடுக்கும். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெற்று வருகிறது’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள்- பார்த்திபன் சொல்லும் தேர்தல் கணக்கு!

மாவட்ட செய்திகள்

Most Popular

இரண்டே விருப்ப மனு… ஓபிஎஸ், தினகரனுக்கு செக் வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே விருப்ப மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுகவும் அதிமுகவும் அடுத்தடுத்து அறிவித்தன. அந்த வகையில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆஸ்தான...

தமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்!

தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற தனது முயற்சி வெற்றி பெறவில்லை என பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். ஒவ்வொரு...

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி....

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்

16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்
TopTamilNews