Home இந்தியா போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் - பிரியங்கா ஆவேசம்

போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும் – பிரியங்கா ஆவேசம்

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த 14ம் தேதியன்று பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக 19 வயது தலித் பெண் ஒருவர் தனது அம்மாவுடன் வயலுக்கு சென்றார். திடீரென காணாமல் போன அந்த பெண்ணை தாய் தேடிய போது சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆடையில்லாமல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, நாக்கு வெட்டப்பட்டு மற்றும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த தனது மகளை அந்த தாய் ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஜவஹர்கலால் நேரு மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் நிலை மோசமடைந்ததால் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அந்த பெண் மரணம் அடைந்தார். பெண்ணின் சடலத்தை பெற்றோரின் அனுமதியின்றி காவல்துறையினரே அவசர அவசரமாக எரித்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோ ஹத்ராஸ்க்கு நடந்தே சென்றனர். அவர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்ததால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is pjimage-13-1-1024x652.jpg

இந்நிலையில் ஹத்ராஸில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “ஹத்ராஸ் சம்பவத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன். உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபப்டுகின்றன. ஆனால் அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. அகம்பாவம் பிடித்த அரசால் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. போலீசாரின் லத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க பயன்பட்டிருக்க வேண்டும்” எனக் ஆவேசாமாக கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார். மத்திய...

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார். கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்...

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வை எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் வேனில் வீடு வீடாக சென்று வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை விற்பனை செய்யும் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!