போயஸ் கார்டனில் ஆடம்பர பங்களாவா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தான் போயஸ் கார்டனில் ஆடம்பர பங்களா வாங்கியதாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தான் போயஸ் கார்டனில் ஆடம்பர பங்களா வாங்கியதாகப் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘அடங்கமறு’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து ‘ஸ்க்ரீன் சீன்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்தடுத்து 3 திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து 3 படங்களில் நடிக்கும் ஜெயம் ரவியின் சம்பளத்துக்குப் பதிலாக அவருக்கு போயஸ் கார்டனில் வீடு ஒன்றை தயாரிப்பாளர் தரப்பில் வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம், ரஜினிகாந்த்தின் இல்லம் என விஜபி.கள் வீடு உள்ள பகுதியில் ஜெயம் ரவிக்கு ஆடம்பர பங்களாவா? என்று பலர் ஆச்சர்யமடைந்தனர். 

இந்நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் படி பதிவு வெளியிட்டுள்ளார், ‘போயஸ் கார்டனில் வீடு பெற்றதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் வதந்தி. ஒரு செய்தியை வெளியிடும் முன் அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட வேண்டும்’ என்று அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களாகப் பரவி வந்த வதந்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....