போன் நம்பர் கொடுத்த எச்.ராஜாவை வச்சி செஞ்ச தமிழன் பிரசன்னா!

தமிழன் பிரசன்னா நம்பரை ட்விட்டரில் ஷேர் செய்து, அவருக்கு போன் செய்யும்படி மறைமுகமாக உணர்த்திய எச்.ராஜாவுக்கு தமிழன் பிரசன்னா அளித்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழன் பிரசன்னா நம்பரை ட்விட்டரில் ஷேர் செய்து, அவருக்கு போன் செய்யும்படி மறைமுகமாக உணர்த்திய எச்.ராஜாவுக்கு தமிழன் பிரசன்னா அளித்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்று தி.மு.க பேச்சாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா மீது பா.ஜ.க-வினர் கோபத்தில் உள்ளனர். தமிழன் பிரசன்னாவை கண்டிக்காவிட்டால் கருணாநிதி, பெரியார், அண்ணா பற்றிய உண்மைகளை பேசுவோம் என்று எச்.ராஜா கூறியிருந்தார். அப்படியாவது உண்மையை பேசுங்கள், பா.ஜ.க-வினர் தெளிவடைவார்கள் என்று தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் பதிலடி அளித்திருந்தார்.
இந்த நிலையில் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “யாரோ தமிழன் பிரசன்னாவாம். மாண்புமிகு பிரதமர் அவர்களை அடிக்கடி இழிவாக பேசும் வழக்கம் உள்ள நபர் என்று கேள்வி. இதுதான் அவரது நம்பர் என்கிறார்கள்” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதன் மூலம் தமிழன் பிரசன்னாவுக்கு போன் செய்து மிரட்டுங்கள் என்று சொல்லாமல் சொன்னார் எச்.ராஜா.

h-raja-78

இதற்கு தமிழன் பிரசன்னா பதிலடி அளித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், “எனது PRO வாக எச்.ராஜாவை நியமித்து உள்ளேன்,அவர் என் அலைபேசி எண்ணை முகநூலில் பதிவிட்டுள்ளார் ஆகவே “எனக்கு வரும் அழைப்புகளை எச்.ராஜாவின் எண்ணுக்கு “Call Forward ” செய்துள்ளேன், நிறைய அழைப்பு கொடுக்குமாறு BJP, RSS, சங்கிகளை கேட்டுக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார். தமிழன் பிரசன்னாவின் இந்த பதிலடியை எச்.ராஜா எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது தமிழன் பிரசன்னாவுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் எச்.ராஜாவுக்கு ஃபார்வர்டு ஆவதால் எச்.ராஜா கடுப்பில் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

 

Most Popular

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு...

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை...