Home சினிமா போன் செக்ஸ்-க்கு அழைத்தார்: கபாலி நடிகர் மீது டிவி தொகுப்பாளினி பாலியல் புகார்

போன் செக்ஸ்-க்கு அழைத்தார்: கபாலி நடிகர் மீது டிவி தொகுப்பாளினி பாலியல் புகார்

‘கபாலி’ படத்தில் நடித்த ஜான் விஜய் மீது பாடகியும், தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘கபாலி’ படத்தில் நடித்த ஜான் விஜய் மீது பாடகியும், தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாடகி ஸ்ரீரஞ்சனி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ஜான் விஜய் போனில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக மீ டூ ஹேஷ்டேக் மூலம் ஸ்ரீரஞ்சனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேச தனது கணவர் அமித் பார்கவ் உறுதுணையாக இருப்பதாகவும், தைரியாமாக குரல் எழுப்பிய சின்மயி ஆகியோருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஜான் விஜய் பெண்களிடம் மோசமாக நடந்துக் கொள்வார். பல பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைப்பார். ஒரு முறை அவரை பேட்டி எடுக்க சென்றிருந்தேன். அது முடிந்து 1 மாதம் கழித்து நள்ளிரவில் எனக்கு போன் செய்து, நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என கேட்டு வழிந்தார். தூக்கத்தில் இருந்த நான், நாளை பேசுகிறேன் என்று சொல்லியும் அவர் விடவில்லை. போனில் ஆபாசமாக பேச தொடங்கினார். உங்கள் மனைவிக்கு போன் செய்வேன் என்று மிரட்டியதும் போன் காலை துண்டித்தார். அதன் பிறகு ஜான் விஜயின் நிறுவனத்தில் பயிற்சி பெற வரும் பல பெண்களை நான் எச்சரித்திருக்கிறேன்’ என்று ஸ்ரீரஞ்சனி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜான் விஜய்-யை தொடர்ந்து கடம் வித்வான் உமாஷங்கர் மீது ஸ்ரீரஞ்சனி பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும், இது போன்று பாலியல் சில்மிஷங்களில் ஈடுபடும் ஆண்களின் முகத்திரையை கிழிக்க, உங்களு நேர்ந்த கொடுமைகளை மூடி மறைக்காமல் வெளியே கொண்டு வாருங்கள் எனவும் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!