Home அரசியல் போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

கூட்டணி கட்சிக்கு தோள்கொடுக்க வீறுகொண்டெழுந்த எச்.ராஜா “கஞ்சி குடிக்கும்போது குல்லாய் போட்டுக்கலாம், ஆனால் காவித்துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்” என விளாசியிருக்கிறார்.

போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

‘தேர்தல் முடிகிற வரைக்கும் கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்கள், எதையாவது பேசி, விழுகிற ஓட்டையும் கெடுத்துவிடவேண்டாம்’ என மேலிடத்திலிருந்தோ அல்லது அதிமுகவிலிருந்தோ எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டிருப்பார்கள் போலிருந்தது தேர்தல் நேரத்தில். கொஞ்சநாளைக்கு கங்காவா இருந்த ஹெச்.ராஜாவை திரும்பவும் யாரோ சீண்டிவிட்டுவிட்டார்கள், சந்திரமுகியாகி வருகிறார் சமீபமாக. அதுவும் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக வேறு இருக்கிறது. சாரணர் தேர்தல் மாதிரி ஓட்டுப்போட்டு ஜெயிக்கிறதுதான் எட்டாக்கனி. எனவே, தமிழக பாஜக தலைவர் மாதிரி நியமன பதவிகள் கிடைத்தால்தான் உண்டு, இல்லையென்றால் கடைசிவரை ட்விட்டரிலேயே அரசியல் வாழ்க்கை முடிந்துபோய்விடும் என்பதால், முடிந்தவரை இறங்கி ஆடுகிறார் எச்.ராஜா.

Ravindranath MP with saffron towel

அவருக்கு தீனி போடுவதுபோல் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. தேனி, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற வினாயகர் சதுர்த்தி பேரணியில் கலந்துகொண்ட வருங்கால மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் பேசுகையில் “முதலில் நாம் இந்து, அப்புறம்தான் மற்றதெல்லாம்” என பேசியிருந்தார். சும்மா இல்லை, கழுத்தில் காவித்துண்டு உடுத்தி. இது பலதரப்பிலிருந்தும் விமர்சனத்தை எழுப்பியிருந்தது. கூட்டணி கட்சிக்கு தோள்கொடுக்க வீறுகொண்டெழுந்த எச்.ராஜா “கஞ்சி குடிக்கும்போது குல்லாய் போட்டுக்கலாம், ஆனால் காவித்துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்” என விளாசியிருக்கிறார். கழுத்துல கயிறு தொங்குறதுக்கும், கழுத்து கயிறுல தொங்குறதுக்கும் வித்தியாசம் இருக்குதுங்களே ராஜா சார்!

போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews