Home அரசியல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து எஸ்கேப்பான துணைமுதல்வர் ஓபிஎஸ்| கதறும் நீலகிரி மக்கள்

போட்டோவுக்கு போஸ் கொடுத்து எஸ்கேப்பான துணைமுதல்வர் ஓபிஎஸ்| கதறும் நீலகிரி மக்கள்

இயற்கை ஒவ்வொரு முறையும் தனது விசித்திர முகத்தை தடம் பதித்து செல்கிறது. கோடையில் தண்ணீர் இல்லாமல் மொத்த தமிழகமும் கதறிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் 100 வருஷங்களில் ஏற்படாத அளவிற்கு நீலகிரி மாவட்டத்தில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இரண்டே நாளில் மொத்தமாக கொட்டித் தீர்த்த மழைக்கு மொத்த நீலகிரியுமே நிலைகுலைந்து போனது.

போட்டோவுக்கு போஸ் கொடுத்து எஸ்கேப்பான துணைமுதல்வர் ஓபிஎஸ்| கதறும் நீலகிரி மக்கள்

இயற்கை ஒவ்வொரு முறையும் தனது விசித்திர முகத்தை தடம் பதித்து செல்கிறது. கோடையில் தண்ணீர் இல்லாமல் மொத்த தமிழகமும் கதறிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் 100 வருஷங்களில் ஏற்படாத அளவிற்கு நீலகிரி மாவட்டத்தில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இரண்டே நாளில் மொத்தமாக கொட்டித் தீர்த்த மழைக்கு மொத்த நீலகிரியுமே நிலைகுலைந்து போனது. அதிலும் குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த பெருமழைக்கு 5,000க்கும் அதிகமானோர் தங்களுடைய வீடுகளையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

nilgris

சுமார்  ரூ.130 கோடிக்கும் அதிகமான அளவிற்கு இந்த மழையால் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கமான அளவையும் குறைத்து 1 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
“மழைக்காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. விளக்கு பற்ற வைக்க மண்ணெண்ணெய்யை மட்டுமே இந்த மலைப் பகுதிகளில் நாங்கள் நம்பியிருக்கிறோம். மேலும், மழைக்காலங்களில் அடுப்பெரிக்க விறகுகள்  கிடைப்பதில்லை. மண்ணெண்ணெய் அடுப்புகளையே பயன்படுத்துகிறோம். ஏற்கெனவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் போதுமான அளவு கிடைப்பதில்லை.  10 லிட்டரிலிருந்து படிப்படியாகக் குறைத்து 2 லிட்டர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதையும் குறைத்து ஒரு லிட்டர் வழங்குகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்குக் கூடுதலாக வழங்காவிட்டாலும் பரவாயில்லை. குறைத்து வழங்கியுள்ளனர். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யை வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று வேதனையுடன் சொல்கிறார்கள் நீலகிரி மக்கள்.

ops

இது குறித்து உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், “மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு துணை முதல்வர், அமைச்சர் எனப் பலரும் நேரில் வந்து நிவாரணங்களை வழங்குவது போன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, வெறும் விளம்பரம் செய்து விட்டுப் போனார்கள். ஆனால், அடிப்படை தேவைக்கான பொருட்களைக் கூட வழங்கவில்லை. ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை இந்த மாதம் குறைத்தே வழங்கியுள்ளனர். இது மக்களை வஞ்சிக்கும் செயல்” என்றார் குமுறலுடன்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலாவிடம் பேசினோம். “இந்த மாதம் எங்களுக்கு மண்ணெண்ணெய் குறைவாகவே வந்தது. மக்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வழக்கமாக வழங்கப்படும்” என்றார். அடுத்த மாசம் வரைக்கும் மழையை வரவேண்டாம் என்று பிரார்த்தனை செய்ய வேண்டியது தான் என்று சலிப்புடன் சொல்கிறார்கள் நீலகிரி மக்கள்.

போட்டோவுக்கு போஸ் கொடுத்து எஸ்கேப்பான துணைமுதல்வர் ஓபிஎஸ்| கதறும் நீலகிரி மக்கள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மோடி அரசே! என்னை கைது செய் – நடிகை ஓவியா சவால்

இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சூழலில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நாடு முழுவதும்...

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65 உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசு வெளியிடும்...

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....
- Advertisment -
TopTamilNews