பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை எஸ்.பி பாண்டியராஜன் அதிரடி மாற்றம்!

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

abuse

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிட்ட கோவை எஸ்பி 

pollachi

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிடுவதன் மூலம், பாதிக்கப்பட்ட மற்றவர்களை மிரட்டக் குற்றவாளிகள் நினைப்பதாகவும், அதற்கு கோவை எஸ்பி பாண்டியராஜன் ஒத்துழைப்பு அளித்ததாகவும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. 

 பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை 

hc

இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  என்பவர் இது போன்று இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். அதனால் கோவை எஸ்பி மற்றும் அரசாணை  வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்தரியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

பணியிடமாற்றம்

kovai sp

இந்நிலையில்   கோவை எஸ்பி பாண்டியராஜன் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி, மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 

அதே சமயம் கோவைக்கு புதிய எஸ்.பியாக சுஜித் குமாரும், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  அன்புமணியை பார்த்து கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி: வாயில் அடித்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ!

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....