Home குற்றம் உள்ளூர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஆபாச வீடியோக்களும், ஆளுங்கட்சியினரும்?! நெஞ்சை பதற வைக்கும் உண்மைகள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஆபாச வீடியோக்களும், ஆளுங்கட்சியினரும்?! நெஞ்சை பதற வைக்கும் உண்மைகள்!

​​​​​​​நண்பன் என நம்பி வந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும்   காட்சியானது  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொள்ளாச்சி: நண்பன் என நம்பி வந்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும்   காட்சியானது  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பிறகு தான் பெண்கள் பாதுகாப்பில் தமிழகத்தின் நிலை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.

பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் அந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. திடீரென்று ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட திருநாவுக்கரசு நண்பர்கள். அந்த பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாகப் படம்பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து அதை வைத்து அப்பெண்ணை மிரட்டி, அவரிடம் இருந்த நகைகளை மிரட்டி வாங்கியதாகக் கூறப்படுகிறது.

 

abuse ttn

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்,  சம்பவம் தொடர்பாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த போலீசாரிடம் புகார் அளிக்க, புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசை   இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் திருப்பதியில் கைது செய்தனர்.

இந்நிலையில் தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது.  நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டத்தில் கதறி அழும் அந்த பெண்ணின் குரல் நம்மை பதைபதைக்க வைக்கிறது. உன்னை ஃப்ரெண்டுனு நம்பித்தான் வந்தேன், என்னை விட்டுட்டு ப்ளீஸ் என்று என்று அந்தப்பெண் கதறுவதும், அதனைப் பொருட்படுத்தாது திருநாவுக்கரசு தொடர்ந்து மறைமுகமாக வீடியோ எடுக்கச்சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

abuse ttn

இந்த கும்பலில்  20 இளைஞர்கள் வரை இருந்துள்ளனர். பொள்ளாச்சியில் கேபிள் தொழில், பார் குத்தகை என ஆளும் கட்சி துணையுடன் இவர்கள் சில  தொழில்கள் செய்து வந்தாலும், பெண்களை வைத்து சம்பாதிப்பதையே முழு நேர தொழிலாக வைத்து வந்துள்ளனர். முக்கியமாக சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பெண்கள் தான் இவர்கள் டார்கெட். பெண்கள் பெயரில் பேக் ஐடி தயாரித்து பெண்களுக்கு வலைவீசி, உடல் சம்பந்தமான இச்சை கேள்விகளைக் கேட்பார்கள். பெண்களும் நம்மிடம் பேசுவது பெண் தான் என்பதை நம்பி அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அதை வைத்து மிரட்டி அவர்களைப் பணிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த கும்பல். 

abuse 4 ttn

இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரான பொள்ளாச்சி ஜெயராமன்,  இரண்டு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.  அதனால்தான் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  எது எப்படியோ, இத்தனை பெரிய கொடூரம் தமிழகத்தில் நடந்திருப்பது தமிழகத்துக்கே பெரிய கரும்புள்ளியாகத் தான் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள இந்த பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு  அதிகபட்ச தண்டனை கொடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று  அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...
Do NOT follow this link or you will be banned from the site!