Home தமிழகம் பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ttn

பொன் மாணிக்கவேலுக்கு நீட்டிக்கப்பட்ட ஒரு ஆண்டு பதவிக்காலம் கடந்த 30 ஆம் தேதியோடு நிறைவடைந்ததால், சிலை கடத்தல் தொடர்பாக அவரிடம் இருக்கும் அனைத்து கோப்புகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. 

tnj

ஆனால், உச்சநீதிமன்றம் தான் என்னை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்ததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஆவணங்களைத் தர முடியாது என்று தெரிவித்தார். அதன் பின், ஆவணங்களை ஒப்படைக்கும் படி கடந்த 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, பொன்.மாணிக்கவேல் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிடி வடிவில் சமர்ப்பிக்கிறேன் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆவணங்களை ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் படி அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

91.7 லட்சம் பேர் சிகிச்சையில் – உலகளவில் கொரோனா

அக்டோபர் 20-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால்...

எந்த விரலில் குங்குமம் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் ?

அன்பு மற்றும் பக்தியின் அடையாளமாக திகழும் மங்களகரமான குங்குமத்தில் தெய்வீக தன்மை, மருத்துவ குணம், சுப தன்மை, அதிக நேர்மறை சக்திகள் அடங்கியுள்ளதால், நெற்றியில் இடும் பொழுது உடல் மற்றும்...

“நாளை முதல் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை” : அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் சோதுபதி மற்றும் புகழரசி ஆகியோருக்கு ஆட்சியர் சிவராசு சால்வை அணிவித்து...
Do NOT follow this link or you will be banned from the site!