Home தமிழகம் பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில் குதிக்க போவதாக திருமா அறிவிப்பு!

பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில் குதிக்க போவதாக திருமா அறிவிப்பு!

பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதலைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். 

பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில்  குதிக்க  போவதாக திருமா அறிவிப்பு!

அரியலூர் : பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதலைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். 

vote

மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம்  தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ponparapi

இந்த மோதலில் மோதலில் ஒருவர் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சிலர் சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு  25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்கு பதிவு செய்தனர். 

thiruma

இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இது போன்ற கொடூர தாக்குதல் அரங்கேறிய பின்னரும் இது குறித்து கண்டனம் தெரிவிக்காத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்றார். 

ramadoss

பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்குகளை பதிவு செய்து, அவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: 144 தடை உத்தரவு; பொன்னமராவதி ஏரியா முழுவதும் பதற்றம்!

பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில்  குதிக்க  போவதாக திருமா அறிவிப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தடுப்பூசிகளில் எது சிறந்தது என பாகுபாடு பார்க்காதீர்கள்- மா.சுப்ரமணியன்

அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், “இஎஸ்ஐமருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் 400 படுக்கை வசதிகள் உள்ளது. கடந்த...

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்

கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதளை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியய்களுக்கும் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையண்பு...

28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம் கட்டியது எப்படி? வைரலாகும் வீடியோ

28 மணி 45 நிமிடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிராட் குழுமம் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறது.

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...
- Advertisment -
TopTamilNews