Home தமிழகம் பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் - காவல்துறை

பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் – காவல்துறை

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1070ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1070ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெளியூர்களில் வேலைக்காக சென்றோர் வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

police

இந்நிலையில் பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும் எனக்கூறிய கமிஷ்னர் ஏ.கே. விஸ்வநாதன், விண்ணப்பித்தவுடன் பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மைத் தன்மை விசாரிக்கப்படும் என்றும் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை என 3 காரணங்களுக்கு மட்டுமே அவசர பயண பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னையிலிருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்ல பாஸ் வழங்கப்படுகிறது. இதுவரை 9 ஆயிரம் இ.மெயில்கள் வந்துள்ளன என்றும் கமிஷ்னர் தெரிவித்தார்

 

Most Popular

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”,...

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல்...

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் 25ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதனையொட்டி தாயார்...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் நாளை கருத்து கேட்பு !

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பெற்றோர், மாணவர்களிடம் நாளை கருத்து கேட்பு நடைபெறுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்...
Do NOT follow this link or you will be banned from the site!