Home சினிமா பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘பேட்ட’?

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘பேட்ட’?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘பேட்ட’?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் நவ.29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து ரஜினி படம் வெளியானால் வசூலில் பாதிப்பு இருக்கலாம் என்ற காரணத்தால் ‘பேட்ட’ படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸ் இல்லை என்றால் பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகையால் பொங்கல் பண்டிகைக்கு சோலோவாக தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய ‘பேட்ட’?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பசுவின் பெயரால் இளைஞர் அடித்துக் கொலை – இந்துத்துவ வெறியர்களால் தொடரும் அட்டூழியம்!

மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரைச் சேர்ந்த பாபு லால் பில் என்பவரும் அவரது நண்பர் பிந்துவும் வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்குச்...

“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்!

உயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த...

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale...

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில்...
- Advertisment -
TopTamilNews