Home சினிமா பொங்கல் பரிசாக தர்பார் டிக்கெட்டும் கொடுத்து, லீவும் கொடுக்கும் பலே கம்பெனி!! 

பொங்கல் பரிசாக தர்பார் டிக்கெட்டும் கொடுத்து, லீவும் கொடுக்கும் பலே கம்பெனி!! 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. தர்பார் திரைப்படத்தின் பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 200 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள தர்பார் படம் உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளிலும், இந்தியாவில் 4000 திரையரங்குகளிலும் வெளியாகிறது. படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 8 கோடி ரூபாயை படக்குழுவினர் செலவு செய்துள்ளனர். 

தர்பார்

படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே விற்றுத் தீர்ந்தது.

 

 

இந்நிலையில் சென்னையில் உள்ள My Money Mantra என்ற தனியார் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தர்பார் படம் ரிலீசன்று விடுமுறை அளித்து தர்பார் படத்தின் டிக்கெட்டையும் வழங்கியுள்ளது. பொங்கல் பரிசாகவே இவை இரண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

பொதுவாக பழங்களை கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. சில சமயங்களில் சர்க்கரை சேர்க்காமல் பழங்களை அரைத்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். ஐந்து பழங்களை ஒன்று சேர்த்து ஸ்மூத்தி...

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு. ஹார்ட் அட்டாக் காரணமாக திடீர் திடீர் என்று நெருக்கமானவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தியைக் கேட்டாலும் கூட அதில்...

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் பேராசிரியர் ச. கல்யாண சுந்தரம். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்...

அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ்! மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை்காக...
Do NOT follow this link or you will be banned from the site!