Home சினிமா பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினியின் அண்ணாத்த!

பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினியின் அண்ணாத்த!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது  திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.  டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக திரைத்துறைப் பணிகள் முழுவதும் முடங்கியுள்ளன. அதன் பல படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு பொங்களுக்கு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், 2020-ம் ஆண்டு பொங்களுக்கு ரஜினி நடித்த தர்பார் படமும் திரைக்கு வந்தது குறிப்பிடதக்கது
 

Most Popular

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!