Home ஆன்மிகம் பைரவாஷ்டமி வழிபாடும் ராகு கால பூஜையின் பலன்களும்! நவம்பர் 30ல் பைரவாஷ்டமி

பைரவாஷ்டமி வழிபாடும் ராகு கால பூஜையின் பலன்களும்! நவம்பர் 30ல் பைரவாஷ்டமி

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கடைபிடிக்கபட்டு வரும் பைரவாஷ்டமி தினத்தின் மேன்மைகளை பற்றி பார்போம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியை மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இதுவே மகேசனின் தோற்றமான கால பைரவருக்கு உகந்த நாளாகும்.

இந்தாண்டிற்கான கார்த்திகை மாத பைரவாஷ்டமி தினம் வருகின்ற நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அனைத்து சிவலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது  . அன்றையதினம் தமிழகத்தில் உள்ள அனைத்து  பிரசித்தி பெற்ற பைரவர் ஆலயங்களிலும் இந்நாளில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறுகிறது .

astami

பைரவர் தன்னை அண்டியவர்களுக்கு உண்டாகும் பயஉணர்வைப் போக்குபவர், கெடுமதியுடையோர் அஞ்சி நடுங்கும் வண்ணம் பயத்தை உண்டாக்குபவர் ஆவார்.

 கால பைரவர் அல்லது வைரவர் என்று தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. உக்ர வடிவில், அழித்தல் செயலுக்கு அதிபதியாகவும், கிராம தேவதை, ஊர்க் காவல் தெய்வம், அஷ்ட திக்குகளை இரட்சிப்பவராகவும் விளங்குகிறார்.

கார்த்திகை மாதத்தில் வரும் கால பைரவஷ்டமியில் வழிபாடு செய்தால் ஓர் ஆண்டில் வரும் அனைத்து அஷ்டமியையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இந்த நாளில், அன்னதானம் செய்வது மிகவும் விசேஷம் ஆகும். 

astami

முருகனுக்கு ஏற்பட்ட  பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோயில் வரலாறு கூறுகிறது.

இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, வைக்கத்தஷ்டமி என்பர். 

இந்த தினத்தில், இங்கு ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும்.

astami

அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன்.

இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். 

இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள். தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, பைரவா.

astami

நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா என்றார். வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார்.

ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான்.

எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு...

பாஜக கேட்டதோ 40, அதிமுக கொடுத்ததோ 25! கூட்டணியில் அதிருப்தியா?

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி...

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி; நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவள்ளூர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், நிலத்தின் உரிமையாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, திருவள்ளூர்...

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை

ஈரோடு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தடைந்தன. ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ்...
Do NOT follow this link or you will be banned from the site!