பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளிய டிக்டாக்! 

சர்வதேச அளவில் முகநூலை பின்னுக்குத் தள்ளி, 70 கோடி பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக டிக் டாக் முன்னேறியுள்ளது.

சர்வதேச அளவில் முகநூலை பின்னுக்குத் தள்ளி, 70 கோடி பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக டிக் டாக் முன்னேறியுள்ளது.

சோஷியல் மீடியாவில் ஃபேஸ்புக் புரட்சி செய்தது என்றால், டிக்டாக் வேறுவிதமான புரட்சியை செய்தது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலி மூலம் பதிவுகள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிரபல சோஷியல் மீடியா தளங்கள் கொஞ்சம் ஆடித்தான் போயின. டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் களமிறக்கிய லஸ்ஸோ என்ற செயலி இளைஞர்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாகவில்லை 

tiktok

இந்நிலையில் உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் செயலிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அதிகபட்சமாக 85 கோடி பேர் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் 4 ஆவது காலாண்டான, அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் மட்டும் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 70 கோடி பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி, இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

Facebook vs Tiktok

மெசஞ்சர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவை, இந்தப் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தச் செயலிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது டிக் டாக். இந்தியாவில் டிக் டாக் செயலியை 45 சதவிகிதம் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிக் டாக் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோனை எளிதில் ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...