பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர்: நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ!

மாநகரப் பேருந்தில் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை: மாநகரப் பேருந்தில் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேருந்தின் சக்கரத்தில் கால்களை வைத்தபடி, ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு இளைஞர் ஒருவர் பயணம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பேருந்தின் சக்கரத்தில் கால்களை வைத்துக் கொண்டு, எதையோ சாதித்தது போல் முக மலர்ச்சியுடன் போஸ் கொடுக்கும் அவரை, உடன் பயணித்த நண்பர்களும் தடுக்காமல் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம், பேருந்து எண் குறித்து விவரங்கள் ஏதும் வெளியாகத நிலையில், மாநகரப் பேருந்து ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
 

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...