Home சினிமா பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!

சென்னை: பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ’2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ’2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் ‘2.0’ படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார். ரஜினியுடன், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பேரக் குழந்தைகள் யாத்ரா தனுஷ், லிங்கா தனுஷ் ஆகியோரும் உடன் பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிக்குமார், முனீஸ்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள ம்லடி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகிறது.

பேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews