Home அரசியல் பேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ!

பேனர் அகற்றுவதில் சிக்கல்… ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்… வருத்தம் தெரிவித்த வைகோ!

மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கியதால் ம.தி.மு.க செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கியதால் ம.தி.மு.க செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 15 ஆம்  தேதி ஒய்.எம்.சி.ஏ  மைதானத்தில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட ம.தி.மு.க வினர் ஏற்பாடு செய்து விழாவை நடத்தினர். அதற்காக, சைதாப்பேட்டையில் சிறிய பதாகைகளையும், கொடிகளையும் வைத்திருந்தனர். இன்று, அதனை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பேனர்களை நீக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த ம.தி.மு.கவினர் மாநகராட்சி ஊழியர்களையும், செயற்பொறியாளர் வரதராஜனையும் தாக்கியதாக புகார் எழுந்தது.  வரதராஜனை தாக்கிய ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ, தனது கட்சி தொண்டர்கள் செய்த தவறுக்காக வருந்துவதாகவும், சண்டையில் தனது கட்சி தொண்டரும் காயம் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் அதிமுக கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

தேனி போடிநாயக்கனூர் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழந்தார். கேரள மாநிலம் மூணாறை...

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு நாடாக அறிவித்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை எட்டியுள்ளது....

அமைச்சர்களை பன்றிக்குட்டிகள் என விமர்சித்த ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் நினைவாக திருவொற்றியூரில் நடைபெறும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், “மொழிப்...
Do NOT follow this link or you will be banned from the site!