Home சினிமா ‘பேட்ட’ வீடியோ லீக்: தனியார் டிவியை வறுத்தெடுத்த ரஜினி பட இயக்குநர்!

‘பேட்ட’ வீடியோ லீக்: தனியார் டிவியை வறுத்தெடுத்த ரஜினி பட இயக்குநர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ், ஃபோட்டோக்களை லீக் செய்ய வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ், ஃபோட்டோக்களை லீக் செய்ய வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் வாரணாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலாகின.

இதனை பலரும் பகிரத் தொடங்கியதையடுத்து, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு காணாமல் போவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்ற வீடியோக்களை லீக் செய்வோருக்கும், சில ஊடகங்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘பேட்ட படக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஃபோட்டோ, வீடியோக்களை பகிராதீர்கள். உங்கள் ஆதரவு தேவை.

சில டிவி சேனலகள் லீக்கான வீடியோக்களை ஒளிபரப்புவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அடுத்து, திருட்டுத்தனமாக வெளியான படங்களை கூட செய்தியாக ஒளிபரப்புவார்கள் போல. கொஞ்சம் கூட நெறிமுறையே இல்லை’ என்று கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டியுள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டடம்!!

துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ்...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா உயிர் பலி! இன்றைய பாதிப்பு நிலவரம்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

விழுப்புரம் சிறுவந்தாடு கிராமத்தில் மூன்று விதவை மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 108வயது மூதாட்டி கிருஷ்ணவேணி. சொந்த வீடு 11 ஏக்கர் நிலம் இருந்தும் இந்த அவலம் ஏன்...

எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜாதலைமையில், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவ படத்திற்கு...
Do NOT follow this link or you will be banned from the site!