Home சினிமா பேட்ட அப்டேட்: ரஜினியுடன் ஜித்தாக நடிக்கும் விஜய் சேதுபதி

பேட்ட அப்டேட்: ரஜினியுடன் ஜித்தாக நடிக்கும் விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்திருக்கும்  விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்திருக்கும்  விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான ‘மரண மாஸ்’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அவர் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!