Home உலகம் பேக்கரியில் வேலை பார்த்தவர் பிரதமர் ஆனார்! உலகின் இளம் பிரதமரின் ஃபிளேஷ்பேக்

பேக்கரியில் வேலை பார்த்தவர் பிரதமர் ஆனார்! உலகின் இளம் பிரதமரின் ஃபிளேஷ்பேக்

பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் சன்னா மரின். உலகின் இளம் பிரதமர் இவர்தான். தன்னுடைய இளமைப் பருவம், படிப்ப, வாழ்க்கை பற்றி ஆச்சரியமூட்டும் பல தகவல்களை சன்னா மரின் பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்திலேயே தன்னுடைய குடும்பம் எல்.ஜி.பி.டி குடும்பம் என்று அதிர்வோடு தொடங்கினார். அது என்ன எல்.ஜி.பி.டி என்று பார்த்தால் லெஸ்பியன், கே, பை செக்‌ஷுவல் மற்றும் டிரான்ஸ்ஜெண்டர் என்று வருகிறது. என்னுடைய அம்மாவின் வாழ்க்கைத் துணையாக இருந்தவரும் ஒரு பெண்தான். அவர்கள் இருவரும்தான் என்னை வளர்த்தார்கள். 

பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் சன்னா மரின். உலகின் இளம் பிரதமர் இவர்தான். தன்னுடைய இளமைப் பருவம், படிப்ப, வாழ்க்கை பற்றி ஆச்சரியமூட்டும் பல தகவல்களை சன்னா மரின் பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்திலேயே தன்னுடைய குடும்பம் எல்.ஜி.பி.டி குடும்பம் என்று அதிர்வோடு தொடங்கினார். அது என்ன எல்.ஜி.பி.டி என்று பார்த்தால் லெஸ்பியன், கே, பை செக்‌ஷுவல் மற்றும் டிரான்ஸ்ஜெண்டர் என்று வருகிறது. என்னுடைய அம்மாவின் வாழ்க்கைத் துணையாக இருந்தவரும் ஒரு பெண்தான். அவர்கள் இருவரும்தான் என்னை வளர்த்தார்கள். 

Channa Marin

டீன் ஏஜில் பேக்கரியில் வேலை செய்தேன். பத்திரிகைகளை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை என்னுடைய பாக்கெட் மணியாக பயன்படுத்தினேன். பள்ளி படிப்பை முடித்ததும் சில காலம் ஒரு இடத்தில் காசாளராகவும் பணியாற்றினேன். என்னுடைய குடும்பத்திலிருந்து உயர் கல்வி படித்த முதல் நபர் நான் தான். 
என்னுடைய குடும்ப சூழல் காரணமாக என்னைப் பற்றி நான் யாரிடமும் வெளிப்படையாக பேசியது இல்லை. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் குடும்பங்கள் இன்றைக்கும் சமூகத்தில் மறைக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்ட குடும்பங்களாகவே உள்ளன. அதன் வலி, வேதனை எனக்குத் தெரியும். எங்களை குறைபாடுடையவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. மற்றவர்களை எங்கள் சமமாக நடத்துவதில்லை.

Channa Marin

நான் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது என்னுடைய வயது பற்றிய பேச்சு வந்தது. எனக்கு 22 மாத குழந்தை உள்ளாள். குழந்தை, கணவர், குடும்பம் என்று இருக்கும் என்னால் எப்படி பிரதமராக செயல்பட முடியும் என்ற பேச்சு வந்தது. நான் எப்போதும் என்னுடைய வயது, பாலினத்தைப் பற்றி சிந்திப்பது இல்லை. என்னுடைய சிந்தனைகள் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தது, அதுவே எனக்கு மக்களின் ஆதரவையும் நம்பிக்கையும் பெற்றுக் கொடுத்து தேர்வு பெறச் செய்தது” என்கிறார் அவர்.
நம்முடைய சிந்தனை, செயல் சரியாக இருந்தால் எந்த அளவுக்கு உயரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார் பின்லாந்தின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின்!

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகள் பிடித்திருக்கிறது. மிகவும் பிரபலமான 10...

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்!

நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்...

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மதுரை அருகே கோழி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர் பொங்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!