பெரிய இடத்து மாப்பிளையை வச்சு பேர் வாங்கற நிலைமையில் நானில்லை …! மூடர்கூடம் நவீன்!

மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்தப் படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமான இதில் பிக் பாக்கெட் அடிப்பவராக நடிகை அனந்தி நடித்துள்ளார். 

மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்தப் படத்தில் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமான இதில் பிக் பாக்கெட் அடிப்பவராக நடிகை அனந்தி நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடைகோரியுள்ளார் ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன். இவர் சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனின் தாய்மாமன் ஆவர். 

AlaudhininArputhaCamera

விசாகனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இயக்குநர் நவீனை நாடியுள்ளார். அதற்காக அட்வான்ஸாக ரூ.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு படம் இயக்காமல் காலம் தாழ்த்தியதாக இயக்குநர் நவீன் மீது தற்போது குற்றசாட்டு எழுந்துள்ளது. அதே சமயத்தில் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று கூறி தடைகோரியுள்ளார் சொர்ணா சேதுராமன்.

இந்நிலையில் இது குறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்திருக்கும் நவீன், ‘நான் விசாகனுக்கு கதை சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தமாகி தொடர்ந்து 9 மாதங்கள் படத்துக்காக வேலை செய்தேன். அவரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டேன். தன்னிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படம் இயக்காமல் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை இயக்கியிருப்பதாக கூறியும், தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதும் தான் சொர்ணா சேதுராமன் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. 

ஆனால் படம் நின்று போனதற்கான காரணத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. இது எதற்காக நின்று போனது என்பது படத்தில் சம்பந்தப்பட்டிருக்கிற எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பு தரப்பில் எந்தப் பிரச்னையும் நடக்காமல் இருந்திருந்தால், குறிப்பிட்ட தேதியில் இப்படம் தொடங்கியிருக்கும். 

அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் கதைக்கும் நான் விசாகனுக்குச் சொன்ன கதைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது அவருக்கும் தெரியும். என்னுடைய தரப்பில் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நீதி வெல்லும்’ என்று கூறியுள்ளார். 

அதையடுத்து இப்பேட்டி வெளியான சமயத்தில் ‘விசாகனால் வீணாப் போச்சு என்ற தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த நவீன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அதில்,  ‘விசாகனால் வீணா போச்சு என்று ஒரு இடத்திலும் நான் சொல்லவில்லை. பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரை கேவலமாக பேசி புகழ் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. முழு இண்டர்வியூவை பாருங்கள். உண்மை தெரியும். Truth & justice will always win’ என்று பதிவு செய்துள்ளார்.

 

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...