Home சினிமா பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும்...ரஜினிக்கு எச்சரிக்கை!

பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும்…ரஜினிக்கு எச்சரிக்கை!

அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. 

பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும்...ரஜினிக்கு எச்சரிக்கை!

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி   நடைபெற்றது.  இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோடி காணொளி மூலம் சோ குறித்து பேசினார். அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘ முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்’ என்றும் ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. 

ttn

இது தொடர்பாகத் தமிழகத்தில் 6 காவல்நிலையங்களில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  புதுச்சேரியில் பெரியகடை காவல் நிலையத்தில் தந்தை பெரியார்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

tn

மேலும் இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன், ‘பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவிட்டால் அவரது வீட்டை வரும் 23 ஆம் தேதி முற்றுகையிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார். 

பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும்...ரஜினிக்கு எச்சரிக்கை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews