Home தமிழகம் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி!

கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி!

சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ttn

இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம், ரஜினிகாந்த் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், பெரியார் பற்றி சர்ச்சையாகப் பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி, இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல்...
- Advertisment -
TopTamilNews