பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள்!

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி. இவர் தொகுதியில்  திரிப்ரையார் என்ற  பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்துள்ளது.

கேரளா: பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய இடத்தை காங்கிரஸ் கட்சியினர் சாணத்தை ஊற்றி கழுவி  சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி. இவர் தொகுதியில்  திரிப்ரையார் என்ற  பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையைச் சரிசெய்து தரகோரி அம்மாநில பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து அதிகாரிகள் சாலையை முறைப்படுத்தித் தருவதாகக் கூறிய பின்னரே போராட்டத்தை விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

geetha

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எம்எல்ஏ கீதா கோபி போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள கீதா கோபி, தான் 
 பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

youth

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால்  இந்த குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ் கட்சியினரோ, எம்எல்ஏ கீதா கோபிக்கு தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை. அதைக் கண்டிக்கும் விதமாகவே இதைச் செய்ததாகக் கூறியுள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Most Popular

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பலவித சந்தேகங்களை மக்களிடம் நாள்தோறும் தோன்றச் செய்துகொண்டே இருக்கிறது. ஏனெனில், நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர். குணமடைபவர்களின்  சதவிகிதம் அதிகம். ஆனாலும் இறப்போர் எண்ணிக்கையும்...

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துளசி மணிகண்டன். இவரிடம் சென்னையை சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி...

பி.ஆர்க் படிப்பு: என்.ஆர்.ஐ-க்கு 15 சதவிகித ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பி.ஆர்க் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பாணையை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை

10ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை...