Home சினிமா பெண்கள் பாதுகாப்பு பேரணி: நடிகை நயன்தாரா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

பெண்கள் பாதுகாப்பு பேரணி: நடிகை நயன்தாரா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களின் சிறப்பை போற்றிடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (இன்று) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களின் சிறப்பை போற்றிடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இந்நிலையில்  வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு  பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  

ttn

சுமார் 500க்கும்  மேற்பட்ட பெண்கள்  பங்கேற்ற இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

ttn

இந்த பேரணியானது எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை ” என்ற வாசகங்களுடன் கூடிய பலகை வையுங்கள்!

"ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை " என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டுமென போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 பேருக்கு ஒரு ராணுவ வீரர்; காஷ்மீரை மிஞ்சிவிட்டது தமிழீழம்… கொளத்தூர் மணி

இலங்கை இறுதி யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை என்ன? என்பது பற்றி ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கவலை...

தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்! எதற்கு தெரியுமா?

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடமலை மயிலை பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்- அச்சத்தில் பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் கடமலை மயிலை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை...
Do NOT follow this link or you will be banned from the site!