Home சினிமா புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் நடிகருடன் ஒரு சந்திப்பு!

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் நடிகருடன் ஒரு சந்திப்பு!

நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் நடிகருடன்  ஒரு சந்திப்பு!

மும்பை:  நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்

பாலிவுட்டின் பிரபல நடிகராக எய்ட்டிஸ் காலகட்டங்களில் வலம்வந்தவர்  ரிஷிகபூர். இவர் நடிகர் ராஜ் கபூரின் மகனாவார்.  பாபி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான ரிஷிகபூர் தன்னுடன் பல படங்களில் நடித்த நீது சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகன் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் ரன்பீர் கபூர். 

rishi

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிஷி கபூருக்கு எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதனால்  சிகிச்சைக்காகக்  கடந்த  வருடம் செப்டம்பர் மாதம் இவர் அமெரிக்காவுக்குச் சென்றார். இதையடுத்து அவருக்குப் பல கட்டங்களாக நடைபெற்று வந்த சிகிச்சையில், கடந்த  மே 1 ஆம் தேதி எட்டாவது கட்ட சிகிச்சை தொடங்கியது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், இன்னும் இரண்டு மாத காலம் அவர் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

genilia

இந்நிலையில் நடிகர் ரிஷிகபூரை பாலிவுட் நட்சத்திரங்கள்  அனுபம்கெர், ஜெனிலியா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள ரிஷி கபூர், ‘நான் என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய இடைவெளியைப் பெற்றதில்லை . நான் 45 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். நான் 11 மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளேன்.

rishi

நான் மிகவும் புதியதாக உணர்கிறேன். எந்தவொரு வேலையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இப்போது, ​​எனது பணி வரவேற்கப்படுமா அல்லது மக்கள் என்னைக் குப்பைக்குப் போடுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. நான் சிகிச்சையின் போது, ​​எனக்கு  இரத்த மாற்றம் செய்யப்பட்டது. புதிய இரத்தத்துடன் நான் வந்துள்ளேன். நான் மீண்டு வந்ததற்கு என் மனைவி நீது தான் காரணம்’ என்று பதிவிட்டுள்ளார். 

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாலிவுட் நடிகருடன்  ஒரு சந்திப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 70% கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த...

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஆரணி அருகே 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் – ரசிகர்கள் வேதனை!

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையாகப் பேசப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சப்பையாக முடிவது உள்ளபடியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று...
- Advertisment -
TopTamilNews