Home விளையாட்டு பும்ரா அபார பந்துவீச்சு; மெல்போர்ன் டெஸ்டில் சரிவிலும் பிடியை விடாத இந்தியா

பும்ரா அபார பந்துவீச்சு; மெல்போர்ன் டெஸ்டில் சரிவிலும் பிடியை விடாத இந்தியா

ஆஸ்திரேலிய அனிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது

பும்ரா அபார பந்துவீச்சு; மெல்போர்ன் டெஸ்டில் சரிவிலும் பிடியை விடாத இந்தியா

-குமரன் குமணன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அனிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்டின் இரண்டாம் நாளான நேற்று இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் புந்துவீச்சில் நிலைகுலைந்து போனது. குறிப்பாக பும்ரா, மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், ஹெட், பெய்ன், லியோன் ஹேசில்வுட் ஆகிய ஆறு பேரை ஆட்டமிழக்கச் செய்து தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

Oh what a feeling! BOOOOM!#AUSvIND pic.twitter.com/LncsUe0jGq

— BCCI (@BCCI) December 28, 2018

மற்ற விக்கெட்டுகளில் ஷமி, இஷாந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முக்கியமாக கடைசி வரிசை வீரர்களை விரைவாக வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணியால் 66.5 ஓவர்களில் 151 ரண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எந்த பேட்ஸ்மேனும் 25 ரன்களை கூட எட்டவில்லை.

இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்ஸிலை தொடங்க, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பதிலடி 12-வது ஓவரில் தொடங்கியது. விஹாரியை முதலில் 13 ரன்களில் வெளியேற்றிய கம்மின்ஸ், தனது அடுத்த ஓவரில் அதாவது பதினான்காவது ஓவரில் இரண்டாவது பந்தில் புஜாராவையும், அதே ஒவரின் கடைசி பந்தில் கோலியையும் வீழ்த்தினார். ரன் எடுக்காமலேயே இருவரும் மார்கஸ் ஹாரிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். ரஹானேவின் விக்கெட்டையும் கம்மின்ஸ் கைப்பற்றினார். ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே. அடுத்து வந்த ரோஹித் ஷர்மா 5 ரன் எடுத்த நிலையில் வீழ்ந்தார். ஹேசில்வுட் இந்த விக்கெட்டை கைப்பற்றினார்.

Stumps on Day 3 of the 3rd Test.

A total of 15 wickets have fallen today. After bowling Australia out for 151, #TeamIndia are 54/5 in the second innings, lead by 346 runs.

Updates – https://t.co/xZXZnUvzvk #AUSvIND pic.twitter.com/p74NK3LUKb

— BCCI (@BCCI) December 28, 2018

முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் மட்டும் 28 என்ற ஸ்கோருடன் களத்தில் உள்ளார். மறுபக்கம் 12 பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்து நிற்கிறார் ரிஷப் பண்ட். ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என இந்திய அணி சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ஆஸ்திரேலியாவின் 10 மற்றும் இந்தியாவின் 5 என மொத்தம் பதினைந்து விக்கெட்டுகள் விழுந்துள்ளன. போட்டியின் முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் இந்திய அணி 346 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. முழுதாக இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இந்தியா இந்த இன்னிங்ஸை எப்படி முடித்தாலும் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை சுருட்டி வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம்.

பும்ரா அபார பந்துவீச்சு; மெல்போர்ன் டெஸ்டில் சரிவிலும் பிடியை விடாத இந்தியா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews