புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வையாபுரிமணிகண்டன் அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அதிமுக சார்பில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.வையாபுரிமணிகண்டன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதேபோல் தொகுதி முழுவதும் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் திரு.வையாபுரிமணிகண்டன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் கஜேந்திரன், ராஜாங்கம், உதயசூரியன், விஸ்வநாதன், பழனியப்பன், நவீன், செல்வம், பஞ்சநாதன், அரிகிருஷ்ணன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, பிரபா, குமார், ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் , தொண்டர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.