Home அரசியல் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள்” என்ற அம்மாவின் கனவினை நனவாக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி, மக்கள் வாழ்வு வளம்பெற தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

இப்புத்தாண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!