பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே கொடுங்க…… வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்த டீலர்கள்

பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு சப்ளை செய்யுங்க என வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகை அளவை குறைக்கும் மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் பி.எஸ்.6 ரக என்ஜின் வாகனங்களுக்கு மாறும்படி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.6 ரக மாடல் வாகனங்களை மட்டுமே தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலில் வர உள்ளது.

பி.எஸ்.6 கார்கள்

இந்த சூழ்நிலையில், பி.எஸ்.4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலஅவகாசத்தை நீடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து பி.எஸ்.6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் பி.எஸ்.4 வாகனங்களுக்கு பில்லிங் செய்வதை நிறுத்த வேண்டும் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகன டீலர்கள்

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி தனது 70 சதவீத பெட்ரோல் வாகனங்களை பி.எஸ்.6க்கு மாற்றி விட்டது. டொயோட்டா நிறுவனமும் பி.எஸ்.6 கார்களை சப்ளை செய்ய தொடங்கி  விட்டது.  ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனமும் தனது இரண்டு ஆலைகளையும் பி.எஸ்.6 விதிமுறைக்கு ஏற்ப மாற்றி விட்டதாக அறிவித்து விட்டது. ஹூண்டாய், மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிட்ட மாடல் வாகனங்களை பி.எஸ்.6 ரகத்துக்கு மாற்றி விற்பனை செய்து வருகின்றன.

Most Popular

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில்,...

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமான் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தனது கருணை பார்வையால் ஆட்கொண்டு வருகிறார். கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். ஆலயம் பலவற்றில் அழகுற...

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கானா காது கிராமத்தில் இக்பால் என்ற நபர் தன்னுடைய 80 வயதான பக்கவாதம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரால் அவரின் தாயை பராமரிப்பது அவருக்கு...

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...