Home லைப்ஸ்டைல் பிறப்பு முதல் இறப்பு வரை, பெண்கள் மகிழும் தருணங்கள்!

பிறப்பு முதல் இறப்பு வரை, பெண்கள் மகிழும் தருணங்கள்!

‘பெண்’ என்பவள் பிறந்ததுமே குடும்பத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறாள். அவளது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களை பெருமைபடுத்தும் பெண்ணின் வாழ்வின் முக்கியமான தருணங்கள்.

பெண்என்பவள் பிறந்ததுமே குடும்பத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறாள். அவளது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களை பெருமைபடுத்தும் பெண்ணின் வாழ்வின் முக்கியமான தருணங்கள் குறித்து பார்க்கலாம்.

குட்டி தேவதை

தந்தைக்கு கவுரவத்தையும், தாய்க்கு மன நிறைவையும் கொடுக்க ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் விரும்புவார்கள். சுட்டிக்காரியான தங்களது மகள், படிப்பில் கெட்டிக்காரியாக இருந்து உயரிய பட்டங்களை பெறுவதும், சமையல் அறையில் கையில் சுடு காயங்களுடன் சமைப்பதும், பெற்றோர்களுக்கு 9 ஆம் கிரகத்தில் வசிப்பது போன்ற உணர்வை அளிக்குமாம்.

காதல்

ஒவ்வொரு பெண்ணும் விரும்புவது, தந்தையை போன்ற ஒரு காதல் கள்வனை கரம்பிடிக்க வேண்டும் என்பதே. பெண்களைப் பொறுத்தவரை தினமும் பூக்கும் பூவை போன்றது தந்தையின் அன்பு. அப்பாவின் குணாதிசயங்கள் மற்றும் அப்பா காட்டும் எதார்த்த பாசத்தை ஒருவனிடம் உணரும் அந்த தருணம் பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.

பெண் கேட்பது

காதலுறும் வயதில் தனது மனதை ஒருவரிடம் பரிக்கொடுத்துவிட்டு, அவனை தனது வாழ்க்கை துணைவனாக ஏற்க துடிக்கும் பெண்ணை, அவளது பெற்றோரிடம் சென்றுஎனது மீதமுள்ள வாழ்நாளை உங்கள் அன்பு மகளுடன் பகிரவிருக்கிறேன்என்று கூறி தனது காதலை அவளது பெற்றோர்களுக்கு புரியவைத்து பெண் கேட்கும் அந்த தருணம் பெண்ணிற்கு ஈடில்லா சந்தோஷத்தை அளிக்குமாம்.

வாழ்வில் உயரம்

பெண் குழந்தைகளை பெற்ற அனைத்து தாய்தந்தையும், தங்களது மகள் சொந்த காலில் நிற்க வேண்டும், சமுதயாத்தில் உயரிய அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அவளது படிப்பிலும், வேலையிலும் தனித்து செயல்பட பாசத்துடன் தன்னமபிக்கையையும் சேர்த்து அளிக்கும் பெற்றோருக்கு ஒரு பெண்ணாக அவர் தரும் பரிசு அவளது வெற்றி மட்டுமே.

திருமணம்

ஒரு பெண் பூப்பெய்தி, மண வாழ்விற்கு தயார் ஆகும்போது, அவளது கழுத்தில் மாங்கல்யம் ஏறும் அந்த நிமிடம் அவளது வாழ்வில் உணர்வு மிகுந்த தருணமாக கருதப்படுகிறது. அப்பாஅம்மாவின் பாசத்தில் வளர்ந்தவளை, அவர்களிடம் இருந்து பிரித்து, வேறு ஒரு குடும்பத்திற்கு மருமகளாக செல்லும் அந்த தருணம்பெண்எனும் பெருமையை தனக்குரியதாக கருதுகிறாள்.

தாய்மை

9 மாதங்கள் கருவை சுமந்து ஒரு உயிரை பெற்றெடுக்கும் அந்த தருணத்தில் பெண்ணாக முழுமையடைகிறாள். தாய்மை என்ற குணம் பிறவியிலேயே பெறப்பெற்ற அதிர்ஷ்டம் பெண்ணுக்கு மட்டுமே உண்டு. தாயாகும் போது ஒவ்வொரு பெண்ணும் உலகில் உள்ள அத்தனை தீய சக்திகளிடம் இருந்து விலகி நிற்கிறாள்.

அம்மா

பிரசவத்தில் மறு ஜென்மம் எடுக்கும் ஒரு பெண், தனது குழந்தை மழலை வாடை குறையாமல் அம்மாஎன்றழைக்கும் அந்த தருணம், தங்களது இளவரசியின் முழுமையையும், பொறுப்பையும் பார்த்து வியந்து ஒதுங்கி நிற்கும் பெண்ணை பெற்ற தாய்தந்தைக்கு இதை விட சிறந்த பரிசை எந்த பெண்ணாலும் தர முடியாது.

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...
Do NOT follow this link or you will be banned from the site!