Home அரசியல் பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை வன்முறையில் ஈடுபடும் தி.மு.க! - ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கு

பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை வன்முறையில் ஈடுபடும் தி.மு.க! – ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கு

தேனியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில் சிக்கித் தவித்தது.

ஆட்சியில் இல்லாத நிலையிலும் பிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை வன்முறையில் தி.மு.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஓ.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார்.
தேனியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில் சிக்கித் தவித்தது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடந்தது. எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை என்று சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. இன்றைக்கு ஆட்சியில் இல்லாத போதே பரோட்டா கடையில் சென்று பரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை, பிரியாணி கடையில் சென்று பிரியாணி சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை, மேலும் பியூட்டி பார்லர் சென்றால் கூட பணம் கொடுப்பதில்லை, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் திமுக ஆட்சியிலிருந்தது.

mk-stalin.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் இருந்தது. மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது குண்டு வீசப்பட்டு 3 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து விட்டு கோடி கோடியாக கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாக சென்று கொண்டு செயல்பட்டனர். ஆனால் அம்மாவின் அரசு அம்மா மறைவுக்குப் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தேனி அல்லிநகரம் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.100 அளவுக்கு நிதி ஒதுக்கி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முடித்துள்ளது” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி, சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும்...

திருக்குறள் படித்து வருகிறேன்; அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல்காந்தி

காவி சாயம் பூசுவது, பூணூல் போடுவது, குடுமி வைப்பது என்று வள்ளுவரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள பாஜகவினர் முயன்று வரும் நிலையில், பிரதமர் மோடி சமீப காலங்களாக திருக்குறள் சொல்லி...

மேலும் 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் நீர் நிலைகளில் சிக்கி உயிரிழந்தோருக்கு தொடர்ந்து முதல்வர் பழனிசாமி நிதியுதவி அளித்து வருகிறார்.

பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை… ஸ்டாலின் கடும் தாக்கு

கோவை கொடிசியா அரங்கத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசிய மு. க....
TopTamilNews