Home அரசியல் பிரியங்கா காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்தாலே பயமாக்கு இருக்கு..... சத்ருகன் சின்ஹா

பிரியங்கா காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்தாலே பயமாக்கு இருக்கு….. சத்ருகன் சின்ஹா

உத்தரப் பிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தின் மகளான பிரியங்கா காந்தியை போலீசார் கையாண்ட விதத்தை பார்க்கும்போது, சாமானிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பார்க்கவே போது பயமாக இருக்கிறது என காங்கிரசின் சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் மாலையில் பிரியங்கா காந்தி, குடியுரிமை  திருத்த சட்டத்துக்கு எதிரனா போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபூரி வீட்டுக்கு சென்றார். அப்போது பெண் காவலர்கள் பிரியங்காந்தியை தடுத்து நிறுத்தினர். அப்போது பெண் காவலர்கள் தன் கழுத்தை பிடித்ததாகவும், தள்ளியதாகவும் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டினார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தியிடம் பெண் போலீசார் நடந்து கொண்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் வெளிப்படைய செய்தி தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியை பார்க்க செல்லும்போது காந்தி-நேரு குடும்பத்தின் மகள் பிரியங்கா காந்தியிடம் போலீசார் தவறாக நடந்துள்ளனர். மகளுக்கு கல்வி மகளை பாதுகாப்போம் என நீங்கள் அடிக்கடி கூறும் வாசகம், போதனை மற்றும் பிரசங்களுக்கும் முரணாக இது உள்ளது. 

மோடி

உங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி உத்தரப் பிரதேச போலீசார் வெட்கக்கேடான முறையில் பிரியங்கா காந்தியை கையாண்டனர். இது மிகவும் கண்டிக்தக்கது. காந்தி-நேரு குடும்ப மகளுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

தமிழ் - தமிழர் அடையாளம் - அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில் இணைத்து கொண்டுள்ள அன்பு சகோதரர் இராஜீவ்காந்தியை அன்போடு வரவேற்கிறோம். உங்கள்...

புதிதாக 503 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக அதிகரித்துள்ளது. 21 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

ஸ்டாலினுக்கு சாரதியான சபரீசன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...

‘அத்திவரதர் போல விஜயகாந்த் வரும் போது பிரளயமே வரும்’ – விஜய பிரபாகரன் அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை எதிர் நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது பிரதான கட்சிகளான...
Do NOT follow this link or you will be banned from the site!