Home உலகம் பிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

பிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8078-ஆக அதிகரித்துள்ளது.

பாரிஸ்: பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8078-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

ttn

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8078-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்து 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 518-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 92,839 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வருவாய் சூப்பர்… லாபம் சுமார்… நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபமாக ரூ.587 கோடி ஈட்டியுள்ளது. பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர்...

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....
Do NOT follow this link or you will be banned from the site!