Advertisementபிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?
Home ஆன்மிகம் பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?

பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?

பதினெட்டு சித்தர்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம் அல்லவா.. அதில் பத்தாவது சித்தராக திருநந்தி தேவரைச் சொல்கிறோம். சைவ சமயத்தில் முதல் குரு இவர் தான். நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?

பதினெட்டு சித்தர்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம் அல்லவா.. அதில் பத்தாவது சித்தராக திருநந்தி தேவரைச் சொல்கிறோம். சைவ சமயத்தில் முதல் குரு இவர் தான். நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

sivan and nandhi

“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம் பவமறுத்த நந்திவானவர்” என்பதிலிருந்து, இவர் சிவபெருமானிடம் இருந்து நேரடியாக தெளிந்து, எல்லோருக்கும் அருள்பவர் என்பது தெளிவாகிறது. 
பிரதோச காலங்களில், நந்தியின் காதுகளின் நினைத்த காரியத்தைச் சொன்னால், நடக்கும் என்கிற நம்பிக்கையில் மக்களை கோயில்களில் அலைமோதுகிறார்கள். ஆனால் அதன் தாத்பர்யத்தைத் தெரிந்துக் கொள்வதில்லை.
பிரதோச கால நேரங்களில் சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். அதனால் தான், பிரதோஷக் காலங்களில் நந்திக்கு விசேஷ பூஜைகள், திருமுழுக்கு வழிபாடு எல்லாம் செய்கிறார்கள். 

sivan and nandhi

சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குபவரும் நந்தி தேவர் தான். மற்ற தேவர்கள், பக்தர்கள் என்று யார் சிவனை தரிசிக்க வந்தாலும், அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. அதனால் தான் சிவாலயங்களில், இவரது உத்தரவு பெற்றப் பின்னரே சிவனைத் தரிசிக்கச் செல்கிறோம். 
ஆலகால விஷத்தை அருந்திவிட்டு, உமையாளின் மடியில் சிவன் மயங்கியிருக்கும் வேளையில் வேறு எவரையும் உள்ளே விடாமல் நந்தி தேவர் தடுத்து, நிறுத்தியிருந்தார்.
ஒரு முறை, கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக விஷ்ணு கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

nandi

தன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு, சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.
எனவே, சிவாலயங்களில் பக்தர்களின் முதல் மரியாதை நந்திக்குத் தான். நந்தியின் அனுமதி பெற்றப் பிறகு, சிவனைத் தரிசிப்பவர்களுக்கே முழுமையாக அருள் கிடைக்கும்.

பிரதோச காலத்தில் ஏன் நந்தியை வழிபடுகிறோம்..!?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி...
TopTamilNews