Home தமிழகம் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

புதுதில்லி: பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

நடப்பாண்டின் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், “பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நல் வாழ்த்துகள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சொகுசு விடுதி ஏன்? குஷ்புவின் கைதில் எழும் சர்ச்சை

கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்படாமல் குஷ்புவை சொகுசு விடுதியில் தங்க வைத்தது ஏன்? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. திருமாளவனின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான குஷ்புவின் கைதிலும் சர்ச்சை...

ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ஏரியில் இரவுநேரங்களில் மணல்திருட்டில் ஈடுபட்ட லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம்...

தர்மபுரி: அருந்ததியர் சமூகத்தினர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அருந்ததியர் சமூகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது,...

”10 நாள் தசரா பண்டிகையில் – கார் விற்பனை படுஜோர்”

பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!