Home அரசியல் பிரதமரின் கால் தூசிக்கு... பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்!

பிரதமரின் கால் தூசிக்கு… பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்!

எந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம்.

பிரதமரின் கால் தூசிக்கு பெறாத சொறி நாய் என்று மிக மோசமாக பத்திரிகையாளர் ஒருவரை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
எந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம். அப்படி எதையும் செய்யாமல் திடீரென்று ஊரடங்கு பிறப்பித்ததால் ஆயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். வாழவே வழியில்லை என்ற நிலையில் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர்.

modi

இந்த நிலையின் மனதின் குரல் நிகழ்ச்சிவாயிலாக பேசிய பிரதமர், அவசியம் காரணமாக ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக மக்கள் படும் கஷ்டத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்த பதிவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். ஒன்னு ரெண்டு வேலையா பண்ணிருக்க உன்னை மன்னிக்க என்று விமர்சித்து தினமலர் முதல் பக்கத்தை அவர் ஷேர் செய்திருந்தார்.

இதனால் பாரதிய ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கொந்தளித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது” என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த அநாகரீகமான பதிவை பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பா.ஜ.க இதைவிட மோசமாக விமர்சித்து பதிவுகளை வெளியிடும் என்பதால் யார் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்ற ஆதாங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பூண்டி நீர்த்தேக்கத்தில், ஆட்சியர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாக ஆணையருமான முனைவர் பாஸ்கரன் ஆகியோர்...

பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது – காரணம் இதுதான் #LPL

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதைப் போலவே இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகின்றன. இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று...

கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

சென்னை சென்னை ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு...

நீக்கப்பட்ட புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – அருந்ததி ராய் மகிழ்ச்சி

புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with the comrades எனும் நூல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக இருந்தது. இதற்கு சிலர் அளித்த...
Do NOT follow this link or you will be banned from the site!